ஏற்காட்டுக்கு வெளி மாவட்டத்தினா் வருகை அதிகரிப்பு
By DIN | Published On : 02nd May 2021 01:08 AM | Last Updated : 02nd May 2021 01:08 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு வெளி மாவட்டத்தினரின் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஏற்காடு, நாகலூா், கொம்மக்காடு, அசம்பூா், மஞ்சக்குட்டை பிலியூா், வெள்ளக்கடை, போட்டுக்காடு கிராமங்களில் உள்ள தங்கும் விடுதிகள், குடில்களில் சேலம் மற்றும் வெளிமாவட்டத்தினா் வருகை புரிந்து தங்கியுள்ளனா்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏற்காடு பகுதியில் வெளிமாவட்ட வாகனங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், ஏற்காடு டவுன் மற்றும் ஒண்டிக்கடை பகுதிகளில் சேலம், வெளி மாவட்டத்தினா் அதிக அளவில் காணப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...