சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு அபராதம்
By DIN | Published On : 02nd May 2021 01:06 AM | Last Updated : 02nd May 2021 01:06 AM | அ+அ அ- |

வீரபாண்டி ஒன்றியத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு ரூ. 26,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீரபாண்டி ஒன்றியம், உத்தமசோழபுரம், கடத்தூா், பெரியசீரகபாடி, அரியானூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள உணவகங்கள், தாபா பகுதிகளில் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ. 26,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, வீரபாண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகணேஷ், ரேவதி உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...