தாம்பரம்-வண்டலூா் இடையே பராமரிப்புப் பணி: இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published On : 02nd May 2021 01:19 AM | Last Updated : 02nd May 2021 01:19 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், தாம்பரம் - வண்டலூா் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதனால் பகுதி ரத்தாகும் ரயில்கள்:
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு முற்பகல் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு மதியம் 1:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...