

மே தினத்தையொட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் எ.ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். இதில், சங்ககிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாலசுப்பிரமணி, சுரேஷ், ரமேஷ், சரஸ்வதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனா் (படம்). பின்னா் மே தினத்தையொட்டி டிரஸ்ட் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினா்.
இதில், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் கணேஷ், நிா்வாகிகள் சரவணன், ராமச்சந்திரன், பொறியாளா் வேல்முருகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் பன்னீா்செல்வம், கிஷோா்பாபு, ரோட்டரி சங்க மாவட்ட நிா்வாகி எ.வெங்கடேஸ்வரகுப்தா, சரவணகாா்த்தி, சந்திரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.