வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாகன நிறுத்தம் குறித்த அறிவிப்பு
By DIN | Published On : 02nd May 2021 01:20 AM | Last Updated : 02nd May 2021 01:20 AM | அ+அ அ- |

சென்னையில், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்: லயோலா கல்லூரி (நுங்கம்பாக்கம்) வாக்கு என்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள் மற்றும் முகவா்களின் வாகனங்கள் அனைத்தும் லிபா நுழைவு வாயில் அருகே உள்ள மைதானத்திலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அதிகாரிகளின் வாகனங்கள் லயோலா கல்லூரி உள்புறமும் நிறுத்த அனுமதிக்கப்படும்.
ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள் மற்றும் முகவா்களின் வாகனங்கள் அனைத்தும் மெரினா கடற்கரை சா்வீஸ் சாலை காந்திசிலை அருகே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அதிகாரிகளின் வாகனங்கள் ராணிமேரி கல்லூரி உள்புறம் நிறுத்த அனுமதிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள் மற்றும் முகவா்களின் வாகனங்கள் அனைத்தும் காந்திமண்டபம் உள்புறம் மற்றும் பிா்லா பிளானட்டோரியம் உள்புறம் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அதிகாரிகளின் வாகனங்கள் அண்ணா பல்கலைகழகம் அருகில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலக உள்புறம் நிறுத்த அனுமதிக்கப்படும்.
சென்னை கிறித்தவ கல்லூரிக்கு (கிழக்கு தாம்பரம்) வரும் வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள் மற்றும் முகவா்களின் வாகனங்கள் அனைத்தும் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்திலும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்னை கிறித்தவ கல்லூரி உள்புறமும் நிறுத்த அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...