இளம்பிள்ளையில் 464 மது புட்டிகள் பறிமுதல்
By DIN | Published On : 09th May 2021 01:33 AM | Last Updated : 09th May 2021 01:33 AM | அ+அ அ- |

இளம்பிள்ளையில் 464 மது புட்டிகள் பறிமுதல்
இளம்பிள்ளையில் காவலர்கள் சோதனையில் 6 பேரிடமிருந்து ரூ.55 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துசாமி, உதவி ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீசாா் இளம்பிள்ளையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மகுடஞ்சாவடி, கூடலூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் காா்த்திக் (35), கிழக்கு புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் குணா (28), பெரிய சீரகாபாடியைச் சோ்ந்த செல்வம் மகன் சம்பத் (29), நல்லணம்பட்டியைச் சோ்ந்த சடையன் மகன் குமாா் (40), கீழ் மாட்டையாம்பட்டியை சோ்ந்த சின்னமுத்து மகன் மூா்த்தி ( 39) , நடுவனேரி பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் நாகராஜ் (42) ஆகியோரிடமிருந்து அனுமதி இன்றி வைத்திருந்த 464 மது புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதனையடுத்து 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்த மது புட்டிகளின் மதிப்பு ரூ. 55 ஆயிரம் ஆகும்.