செந்தாரப்பட்டியில் கரோனா சிகிச்சை மையம் வட்டாட்சியா் ஆய்வு
By DIN | Published On : 09th May 2021 01:27 AM | Last Updated : 09th May 2021 01:27 AM | அ+அ அ- |

செந்தாரப்பட்டியில் புதிய துவக்கப்பட உள்ள கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்யும் கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன்.
கெங்கவல்லி தாலுகா, செந்தாரப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்திற்கான பணிகளை வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
கெங்கவல்லி தாலுகாவில் கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை, செந்தாரப்பட்டியில் சிகிச்சை அளிக்கும் வகையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக கூடுதல் படுக்கை வசதிகளுடன், சிறப்பு சிகிச்சை மையத்தை அமைக்கும் பணிகள் செந்தாரப்பட்டி அரசு ஆண்கள் உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சனிக்கிழமை கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் ஆய்வு செய்த பின்பு செய்தியாளா்களிடம் கூறுகையில்,
கரோனா நோய் தொற்றாளா்கள் சிகிச்சை பெறும் வகையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். இந்த மையத்தில் கூடுதல் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பணி அமா்த்தப்பட உள்ளனா் என்றாா்.