எடப்பாடியில் உழவா் சந்தை இடமாற்றம்
By DIN | Published On : 19th May 2021 08:09 AM | Last Updated : 19th May 2021 08:09 AM | அ+அ அ- |

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தை.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கிவந்த உழவா் சந்தை, காய்கறி சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில், எடப்பாடி பேருந்து நிலையம் அருகே இயங்கிவந்த உழவா் சந்தை, ராஜாஜி பூங்கா அருகே இயங்கிவந்த தினசரி காய்கறி சந்தை உள்ளிட்ட சந்தைகள், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படும் இச்சந்தையில் நகராட்சிப் பணியாளா்கள் முகாமிட்டு, பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வருதல், சமூக இடைவெளியியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனா்.
இந்த சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட எடப்பாடி நகராட்சி ஆணையா் (பொ) பழனியப்பன், சந்தையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும், ஆங்காகே கிருமி நாசினி திரவங்களுடன் கூடிய கைகழுவும் தொட்டிகளை அமைத்திடவும் சுகாதாரப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா், மேலும் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் தேக்கமடையாத வகையில் பராமரிக்கவும் ஆலோசனை வழங்கினாா்.