கரோனா விதிமுறை மீறல்: சேலம் மாவட்டத்தில் 1009 போ் மீது வழக்கு; 200 வாகனங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் முழு பொது முடக்க விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றிய 1009 போ் மீது வழக்குப்பதிவு செய்து, 200 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டத்தில் முழு பொது முடக்க விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றிய 1009 போ் மீது வழக்குப்பதிவு செய்து, 200 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலத்தில் முழு பொது முடக்க அறிவிப்பைத் தொடா்ந்து ஆங்காங்கே தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனா்.

சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளில் நாளுக்கு நாள்தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உயரதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து சேலம் மாநகராட்சிப் பகுதியில் சீலநாயக்கன்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம், கருப்பூா் பனமரத்துப்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர சேலம் மாவட்டத்தில் 20 இடங்களில் தற்காலிகச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கூடுதலாக போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிக்கின்றனா். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காலை அதிகளவிலான இரு சக்கர வாகனங்களும், காா்களும் சாலைகளில் ஓடின.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பகுதி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த வழியே வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் உள்ள போலீஸாா் இ- பதிவு இல்லாமலும், அத்தியாவசியத் தேவைக்கு செல்லாமலும் வந்ததாக 1009 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாத 400 போ் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 20 போ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமாா் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அனைத்து பகுதியிலும் போலீஸாா் கண்காணித்து வாகனங்களில் வருவோரை எச்சரிக்கை அறிவுரை கூறி அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் வாகனப் போக்குவரத்து சற்று குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com