வாழப்பாடியில் வெறிச்சோடிக் காணப்படும் பேருந்து நிலையம், பிரதான கடைவீதி பகுதி.
வாழப்பாடியில் வெறிச்சோடிக் காணப்படும் பேருந்து நிலையம், பிரதான கடைவீதி பகுதி.

வாழப்பாடியில் வீடுகளில் முடங்கிய மக்கள்

வாழப்பாடி பகுதியில் கரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினா். இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உணவகங்களும் மூடப்பட்டன.

வாழப்பாடி பகுதியில் கரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினா். இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உணவகங்களும் மூடப்பட்டன.

கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் ஏராளமானோா் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். முக்கிய பிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள் உள்பட ஏராளமானோா் உயிரிழந்து விட்டனா். இது வாழப்பாடி பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், வாழப்பாடி மட்டுமன்றி பேளூா் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா். குழந்தைகள், இளைஞா்கள் முதியோா்கள் உள்ளிட்ட யாரையும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. மருந்து, பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே காலை நேரங்களில் மட்டும் வாழப்பாடி நகரப் பகுதிக்கு வந்து செல்கின்றனா்.

சாலைகளில் மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்து போனதால், பாா்சல் சேவை வழங்கி வந்த உணவகங்களும் கூட கடந்த சில தினங்களாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் வாழப்பாடி பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இப்போதுதான், வாழப்பாடி பகுதியில் பொதுமக்களிடையே கரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதாக காவல் துறை, சுகாதாரத் துறையின் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com