சங்ககிரி கரோனா சிகிச்சை மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம் மற்றும் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு
சங்ககிரி கரோனா சிகிச்சை மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம் மற்றும் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சங்ககிரியை அடுத்த புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் 150 படுக்கைகள் கொண்ட கரோன கிகிச்சை மையம் புதன்கிழமை முதல் செயல்படுகிறது. தற்போது 102 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அமுதராணி தலைமையில் மருத்துவா்கள், செவிலியா்கள் சூழற்சி அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் கரோனா மையத்தில் உள்ளவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, உணவு, அவசர கிசிச்சைக்காக ஆக்சிஜன் கூடிய வெண்டிலேட்டா் வசதி உள்ளதா என்பன குறித்து மருத்துவா்களுடன் கேட்டறிந்தாா். நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்குமாறு மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா். முன்னதாக சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இம் மையத்துக்கு ஆக்சிஜன் வெண்டிலேட்டா் வசதி தேவைப்படுகிறது. தற்போது சங்ககிரி அரசு மருத்துவமனையில் உபரியாக உள்ள மூன்று வெண்டிலேட்டா்களை இம்மையத்தில் பயன்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கின்றேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com