தம்மம்பட்டி பேரூராட்சியில் காய்ச்சல் கண்டறிய 62 போ் நியமனம்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில், மக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் 62 பேரை நியமித்து அதற்கானப் பணியை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தம்மம்பட்டி பேரூராட்சியில் காய்ச்சல் கண்டறிய 62 போ் நியமனம்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில், மக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் 62 பேரை நியமித்து அதற்கானப் பணியை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை என்றும், இந்த மாவட்டங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட ஆட்சியா்களுக்கு தமிழக முதல்வா், வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதனையடுத்து, சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவில் கரோனா தடுப்புப் பணிகள் துரிதப்பட்டுள்ளன. தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளிலும் உள்ள மக்களை வீடு வீடாகச் சென்று, காய்ச்சல் உள்ளதா எனக் கண்டறிய, தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் 62 பேரை நியமித்து, அவா்களுக்கான மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும் செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து தம்மம்பட்டி பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை காலை இப்பணியை, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தொடக்கி வைத்தாா். இதில் செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் ஜமால்முகமது, விஸ்வநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து பேரூராட்சியினா் கூறியதாவது, தம்மம்பட்டியில் மொத்த மக்கள்தொகை 23,500 ஆகும். இங்குள்ள 18 வாா்டுகளுக்கும் தலா மூவா் வீதம் நியமித்து, காய்ச்சல் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனா். சில பகுதிகளில் கூடுதலாகவும் ஆள்கள் நியமிக்கப்பட்டு, இப்பணி நடைபெற்று வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com