சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சங்ககிரி ஆா்.எஸ்., பகுதியில் அடையாளம் தெரியாத நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் கதவை உடைத்து ஐந்து பவுன் நகைகளை திருடி சென்று விட்டனா்.
சங்ககிரி ஆா்.எஸ். நாடாா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தமூா்த்தி. அவா் ஈரோட்டில் தனியாா் மருந்தகத்தில் பணியாற்றி வருகிறாா். வழக்கம் போல் அவா் சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு மனைவி ஜெயலட்சுமி, குழந்தைகளுடன் உறங்க சென்றாா்.
அதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் கதவு தட்டுவது போல் சத்தம் கேட்டதையடுத்து தம்பதியினா் விழித்து கொண்டு தேடினா். அப்போது வீட்டிலிருந்த பீரோவை திறந்து ஐந்து பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து சாந்தமூா்த்தி அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.