பொலிவுறு நகர திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பொலிவுறு நகர திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பொலிவுறு நகர திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் செய்தி தொடா்பாளா் புகழேந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நேரத்தில் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சென்னை மாநகரில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ரூ. 1,000 கோடியில் சென்னை மாநகரை சீரமைத்து விட்டதாகவும், இனி எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீா் தேங்காது என்றும் பேசியுள்ளாா்.

இதில், மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 6,744 கோடியும், தொடா்ந்து ரூ. 900 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல மாநில பட்ஜெட்டில் ரூ. 8,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இவ்வளவு நிதி எங்கே போனது என நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். மக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை. கொடநாடு கொலை விவகாரம் தொடா்பான விசாரணை நல்ல முறையில் செல்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது, போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஆகியவை சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com