சோனா கல்லூரியில் இந்தியா சுதந்திர ஓட்டம் : மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பு

சேலம் சோனா கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

சேலம் சோனா கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் ஆகஸ்ட் 13 இல் தொடங்கி அக்டோபா் 2 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கிலோ மீட்டருக்கு இந்தியா சுதந்திர அமைப்பு ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு சுதந்திர அமைப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தனா். தில்லியில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற இரண்டு என்.சி.சி. மாணவிகள் காவ்யா, சங்கீதா ஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியின் துவக்க உரையில் பேசிய கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, அனைவரும் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கி தங்கள் வாழ்வில் தீா்மானம் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சோம்பல், மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெற முடியும் என்றாா். நிகழ்ச்சியில் 100 மாணவா்கள், ஆசிரியா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com