

எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியிலுள்ள, புனித செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விமரிசையாக நடைபெற்றது.
எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கிய பேரணியில், திரளான கிறிஸ்துவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி இயேசுவை போற்றிப் பாடியபடி ஊர்வலமாகச் சென்றனர்.
இதையும் படிக்க | முஹர்ரம் புத்தாண்டுச் சிந்தனை: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 9
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற குருத்தோலை பவனி, புனித செல்வநாயகி ஆலய வளாகத்தில் நிறைவுபெற்றது.
ஊர்வலத்தில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி, ஸ்டீபன், கார்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். எடப்பாடி அடுத்த லண்டன் மிஷன் பேட்டையில் உள்ள தேவாலயம், நைனா பட்டி ஆர்.சி. தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.