உலக புத்தக தினம்: துறையூர் கிளை நூலக உறுப்பினர் சேர்க்கை

துறையூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி 1000 உறுப்பினர்கள் மற்றும் 100 புரவலர்கள் சேர்க்கை
துறையூர் கிளை நூலக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக 15வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் செல்வராணி கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பள்ளி மாணவி ஒருவரிடம் வழங்குகிறார்.
துறையூர் கிளை நூலக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக 15வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் செல்வராணி கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பள்ளி மாணவி ஒருவரிடம் வழங்குகிறார்.
Published on
Updated on
1 min read

துறையூர்: துறையூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி 1000 உறுப்பினர்கள் மற்றும் 100 புரவலர்கள் சேர்க்கை மற்றும் புத்தக தினம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. 

துறையூர் நகர 15-வது வார்டில் வாசகர் வட்ட தலைவர் தி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. நூலகர் பெ.பாலசுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தை துறையூர் நகர்மன்ற தலைவி ம.செல்வராணி பெற்றுக் கொண்டார். 15-வது வார்டு உறுப்பினர் ந.புவனேஸ்வரி பள்ளி மாணவ, மாணவியர்கள் 150 பேரிடம் உறுப்பினர் அட்டையையும், அதற்கான சேர்க்கை கட்டணத்தையும் மற்றும் நூலக வளர்ச்சிக்காக ரூ.1000 நன்கொடையும் நூலகத்துறையிடமும் வழங்கினார்.

நிகழ்வில் குளோபல் நேச்சுரல் பவுண்டேசன் கி.நவீன், வாசகர் வட்ட நிர்வாகிகள் வி.வேணுகோபால், ந.தில்லைநாயகம் உள்ளிட்டோரும், வார்டு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவில் நூலகர் சி.என். சாந்தி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com