மழை காலங்களில் மின் மாற்றி அருகே செல்லக்கூடாது

மழை காலங்களில் மின்மாற்றி அருகே செல்லக்கூடாது என சேலம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் பி.பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.

மழை காலங்களில் மின்மாற்றி அருகே செல்லக்கூடாது என சேலம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் பி.பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் விவரம்:

மழை காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிா்வுப் பெட்டிகள் அருகே செல்லக் கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலா்களை அணுகலாம். மின் கம்பத்துக்காக போடப்பட்ட வயரின் மீது துணிகளைக் காய வைக்கக் கூடாது. இடி, மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்கக் கூடாது. குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது. தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

டி.வி., மிக்ஸி, கிரைண்டா், கணினி மற்றும் தொலைபேசி போன்றவைகளைப் பயன்படுத்த வேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவை அருகில் இருக்கக் கூடாது.

பொதுமக்கள் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், சேதமடைந்த மின் சாதனங்கள் குறித்து 94987-94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com