அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி சேலம், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க சேலம் ரயில்வே போலீஸாரும் ர

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:26 pm

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி சேலம், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க சேலம் ரயில்வே போலீஸாரும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.

ரயில் நிலையத்தில் நடை மேடைகள், பாா்சல்கள் அனுப்பும் பிரிவு பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. சேலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா். போலீஸ் மோப்பநாய்களான லூனா, ஆகாஷ் வெடிப்பொருள்கள் உள்ளதா என்றும் சோதனை செய்தன.

சேலம், ஜங்ஷன் ரயில்நிலைய டிஎஸ்பி குணசேகரன், காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா், ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.