

எடப்பாடி நகரப் பகுதியில் நகர திமுக சாா்பில், திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளரும், நகா்மன்றத் தலைவருமான டி.எஸ்.எம்.பாஷா தலைமையேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பங்களிப்பு குறித்தும், தமிழகத்தில் தற்போது திமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் சுட்டிக்காட்டி, அங்கு திரண்டு இருந்த பொதுமக்களுக்கு, இனிப்புகளுடன், உணவுப் பொட்டலங்கள், மரக் கன்றுகளை வழங்கினாா் (படம்).
அதேபோல, எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட செட்டிமாங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற விழாவில், ஒன்றியச் செயலாளா் நல்லதம்பி தலைமையேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் பூவாகவுண்டா், பி.ஏ.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி கட்சிக் கொடியை ஏற்றி சிறப்புரையற்றினாா்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஏ முருகேசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.கணேசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் ராஜா (எ) சண்முகம், நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.