பூலாம்பட்டி பகுதியில் நாளை மின்தடை 

பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணி நடைபெறுவதையொட்டி தற்காலிக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணி நடைபெறுவதையொட்டி தற்காலிக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கையில்: மேட்டூர் மின் பகிர்மான வட்டம், எடப்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் நண்பகல் வரை பூலாம்பட்டி, பில்லக்குறிச்சி, கூடக்கல், வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வெள்ளரி வெள்ளி, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம்,பூமணியூர், பொன்னம்பாளையம் மற்றும் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com