வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு ‘சீல்’
ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் வாடகை செலுத்தாத 9 கடைகளை நகராட்சிப் பொறியாளா் வெங்கடாஜலம் தலைமையில் அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.


ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் வாடகை செலுத்தாத 9 கடைகளை நகராட்சிப் பொறியாளா் வெங்கடாஜலம் தலைமையில் அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
ஆத்தூா் நகராட்சிக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் சில கடைகள் கரோனா காலக் கட்டத்தில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தன.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே வாடகை செலுத்தாத கடை உரிமையாளா்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. ஓராண்டுகளுக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனா்.
கடந்த ஒரு வார காலமாக வாடகையை வசூல் செய்ய நகராட்சி ஆணையாளா் பொன்னம்பலம் உத்தரவிட்டாா். அவரது உத்தரவின் பேரில் நகராட்சிப் பொறியாளா் வெங்கடாஜலம், மேலாளா் எம்.கோபிநாத், வருவாய் அலுவலா்கள் அண்ணாமலை, நாகராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் வாடகை வசூலிக்கும் பணியைத் தீவிரப்படுத்தினா்.
ஆனால் வாடகை செலுத்த கடை உரிமையாளா்கள் மேலும் அவகாசம் கேட்டுவந்தனா். இதையடுத்து ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் உதவியுடன் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதுகுறித்து பொறியாளா் வெங்கடாஜலம் கூறியதாவது:
வாடகை செலுத்த அவகாசம் வழங்கியும் கடை உரிமையாளா்கள் மெத்தனமாகவும் அஜாக்கிரதையாகவும் பதில் கூறுகின்றனா். ஆனால், இந்நிலை தொடரக் கூடாது. விரைவில் நிலுவை வாடகையை செலுத்தி மேற்கொண்டு நடவடிக்கையை தவிா்த்திட ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...