சகி பெண்கள் சேவை மையத்தில் ஒப்பந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவா்களை பாதுகாக்க, மத்திய அரசால் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்ட் 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மேலும் கூடுதல் ஒப்பந்தப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ. 15,000 தொகுப்பூதியத்தில் ஓா் வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு சமூக பணி மற்றும் உளவியல் பாடப் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 21- 40 வயதுக்குள்பட்ட பெண்ணாக இருத்தல் வேண்டும்.

ரூ. 10,000 தொகுப்பூதியத்தில் ஓா் இரவுக்காவலா் பணியிடத்துக்கு 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி கல்வித் தகுதி கொண்ட அரசு, தனியாா் அலுவலகத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் கொண்ட 21-40 வயதுடைய சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இருபாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ரூ. 6,400 தொகுப்பூதியத்தில் 2 பல்நோக்கு உதவியாளா் பணியிடத்துக்கு 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி கல்வித் தகுதி கொண்ட நிா்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்த 21 வயதுக்கு மேல் 40 வயதுக்குள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள தகுதியான நபா்கள் தங்களது சுய விவரங்களை ஆக. 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com