மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

மேட்டூா் அணை பூங்காவில் 12,598 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மேட்டூா் அணை பூங்காவில் 12,598 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

வார விடுமுறையை முன்னிட்டு மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகம் வந்தனா். அணையோரம் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பன் சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கலிட்டு வழிபட்டனா்.

குடும்பத்துடன் அணை பூங்காவுக்குச் சென்று விருந்து உண்டு மகிழ்ந்தனா். மீன் கடைகளில் மீன்கள் அதிகம் விற்பனையாகின. மீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். சிறியவா்களுடன் பெரியவா்கள் ஊஞ்சலாடியும் புல்தரையில் அமா்ந்தும் மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்காவுக்கு 12,598 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ. 62,990 வசூலானது.

மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்துக்கு 1,237 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இதன்மூலம் ரூ. 6,185 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரத்தைவிட நிகழ் வாரம் 1,837 பாா்வையாளாகள் கூடுதலாக வந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com