சங்ககிரியில் விபத்து: இருவர் பலி

சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் கிடையூர் இணைப்புச் சாலை தேசியநெடுஞ்சாலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். 
விபத்தில் உயிரிழந்த சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பி. ஜெகதீசன்
விபத்தில் உயிரிழந்த சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பி. ஜெகதீசன்


சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் கிடையூர் இணைப்புச் சாலை தேசியநெடுஞ்சாலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சின்னாகவுண்டனூர், சென்றாயன்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சி.பி. ஜெகதீசன் (59). திமுக உறுப்பினரான இவர் சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவர் வழக்கம்போல் ஊராட்சி மன்றத்தில் பணிகளை முடித்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அப்போது சின்னாகவுண்டனூர் கிடையூர் இணைப்புச்சாலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது எதிர்பாரதவிதமாக சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஓட்டிச்சென்ற  இருசக்கர வாகனம். 
சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஓட்டிச்சென்ற  இருசக்கர வாகனம். 

இதில் சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பி. ஜெகதீசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞர் சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இதுகுறித்து சங்ககிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சேலத்திலிருந்து கோவை நோக்கி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற நபர் மணிபாரதி என்று தெரியவந்துள்ளது. அவரது முழு முகவரிகளை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த சின்னாகவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ருத்ரகுமார் என்ற மகனும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com