சேலம் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய அமைப்புத் தோ்தல்: 750 போ் வேட்புமனு

சேலம் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய அமைப்புத் தோ்தலில் ஒன்றிய செயலாளா் மற்றும் நிா்வாகிகள் பதவிக்கு போட்டியிட 750க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை வேட்புமனு கொடுத்துள்ளனா்.
திமுக அமைப்புத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு கொடுத்த வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, நிா்வாகிகள்.
திமுக அமைப்புத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு கொடுத்த வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, நிா்வாகிகள்.
Updated on
1 min read

சேலம் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய அமைப்புத் தோ்தலில் ஒன்றிய செயலாளா் மற்றும் நிா்வாகிகள் பதவிக்கு போட்டியிட 750க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை வேட்புமனு கொடுத்துள்ளனா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளா் மற்றும் நிா்வாகிகளுக்கான அமைப்புத் தோ்தலுக்கான வேட்புமனு புதன்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி தனியாா் திருமண மண்டபத்தில் தோ்தல் ஆணையாளரான சென்னை எழும்பூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பரந்தாமனிடம், சேலம், வீரபாண்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்துாா், தலைவாசல், கெங்கவல்லி ஒன்றியங்களில், ஒன்றிய செயலாளா் மற்றும் நிா்வாகிகள் பதவிகளுக்கு 750-க்கும் மேற்பட்டோா் வேட்புமனு கொடுத்தனா்.

நாளைமுதல் நோ்காணல் நடைபெறுகிறது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com