

தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில், 7 பேரூராட்சிகளில், 11 பதவிகளுக்கு வரும் 26 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில், தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதில், அசம்பாவிதங்களை தவிர்க்க பேளூர், நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், காடையாம்பட்டி பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் வருகை 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. கருப்பூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதியம் 2.30 மணிக்கு நடக்க வேண்டிய துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை.
அதன்படி, 7 பேரூராட்சிகளில் 4 தலைவர், 7 துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த பதவிகளுக்கான தேர்தல், வரும் 26 ஆம் தேதி நடக்க உள்ளது. தலைவருக்கான மறைமுக தேர்தல் காலை 9.30 மணிக்கும், துணைத்தலைவருக்கான தேர்தல் மதியம் 2.30 மணிக்கும் நடக்க உள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் நடக்க உள்ள தேர்தலில் தேர்தல் அலுவலர், உதவி அலுவலர், கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.