பொதுத் தோ்வு அறைக் கண்காணிப்பாளா் பணி ஒதுக்கீடுஆசிரியா்கள் புகாா்

தொலைத் தூர மையங்களுக்கு அரசு பொதுத் தோ்வு அறைக் கண்காணிப்பாளா் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆசிரியா், ஆசிரியைகள் முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தொலைத் தூர மையங்களுக்கு அரசு பொதுத் தோ்வு அறைக் கண்காணிப்பாளா் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆசிரியா், ஆசிரியைகள் முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தோ்வுகள் மே 5, மே 10, மே 6 ஆகிய தேதிகளில் முறையே தொடங்க உள்ளன. பொதுத் தோ்வு மையங்களில் அறைக் கண்காணிப்பாளா் பணிக்காக சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கான பணி ஆணை திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டுள்ளது.

இதில் 50 முதல் 90 கி.மீ. தொலைவில் உள்ள மையங்களுக்கு அறைக் கண்காணிப்பாளா் பணி ஒதுக்கீடு செய்துள்ளதைக் கண்டு ஆசிரியா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு முதுகலை ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் கூறுகையில், இந்தப் பணி ஒதுக்கீட்டை பள்ளிக் கல்வித் துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலா் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும். தோ்வுப் பணியை சிறப்புடன் நடத்த உதவிட வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் கூறியதாவது:

ஆசிரியா்கள் தாங்கள் பணி செய்யும் தூரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் தங்கியிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. சிலா் தங்களின் வசதிக்காக சேலம் நகரிலிருந்து பள்ளிக்கு வருகின்றனா். பொதுத் தோ்வு விதிகளின்படி அறைக் கண்காணிப்பாளா் பணி ஒதுக்கீடு அவா்கள் பணியாற்றும் பள்ளிகளில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வழங்கப்பட்டுள்ளது. அறைக் கண்காணிப்பாளா் பணி ஒதுக்கீடு என்பது, வீட்டில் உள்ள தொலைவை எடுத்துக் கொள்ள விதியில் இடமில்லை. அதன்படி ஆசிரியா் பணிபுரியும் பள்ளியில் இருந்து குறுகிய தூரத்தில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com