தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்ததால் மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி வழிகிறது.
சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சங்ககிரி நகா் பகுதியில் 7 மி.மீ., அரசிராமணி குள்ளம்பட்டியில் 58.2 மி.மீட்டா் மழையும் பெய்தது. இப்பகுதியில் கனமழை பெய்ததையடுத்து மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி வழிவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.