மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,10,000 கன அடியாகச் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,10,000 கன அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,10,000 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், வியாழக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 1,25,000 கன அடியிலிருந்து 1,10,000 கன அடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,25,000 கன அடியிலிருந்து 1,10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீா் மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடி நீரும், உபரி நீா் போக்கி வழியாக 87,000 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மழை அளவு 16.20 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com