மின்சாரம் தாக்கியதில் இருவா் பலி
By DIN | Published On : 03rd April 2022 01:12 AM | Last Updated : 03rd April 2022 01:12 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருப்பாளி கிராமம், அக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி மாதேஸ்வரன் (60), தோட்டத்தில் தகரத்தாலான கூரையுடன் கூடிய வீடு உள்ளது. இந்த வீட்டில் ஏற்பட்ட மின்பழுதை சரிசெய்யும் பணியில், அக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த காா்த்தி (26), ஆடையூா் கிராமம், தாழைத்தொட்டம் பகுதியைச் சோ்ந்த நவீன் ராஜா (24) ஆகியோா் ஈடுபட்டனா். அப்போது, கூரையில் வேயப்பட்ட தகரத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
பூலாம்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று உயிரிழந்த இளைஞா்களின் சடலத்தை மீட்டு, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.