மேட்டூர் அருகே விவசாயி கிணற்றில் விழுந்த யானை பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நீதி புத்தில் வட பர்கூர் வனப்பகுதி சென்னம்பட்டி வனச் சரகத்தில் இருந்து வழி தவறி வந்த யானை
கோப்புப்படம்
கோப்புப்படம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நீதி புத்தில் வட பர்கூர் வனப்பகுதி சென்னம்பட்டி வனச் சரகத்தில் இருந்து வழி தவறி வந்த யானை மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்ட கிணற்றில் விழுந்துள்ளது. 

அதிகாலையில் யானை விழுந்ததால் ஆண் யானையா? பெண் யானையா? என்பது தெரியவில்லை. வனத்துறையினர், தீயணைப்பு படையினர் மூலம் கிணற்றில் உள்ள நீரை இறைத்து யானையின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். கிணற்றில் விழுந்த யானை கடந்த ஒரு வருடமாக விவசாயிகளுக்கு தொல்லை தந்து வந்த யானையா? அல்லது புதிய யானையா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

கிணற்றில் விழுந்த யானையை பார்க்க நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com