காவிரியில் வெள்ளப் பெருக்கு

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளப் பெருக்கு

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பூலாம்பட்டி, குப்பனூா், கூடக்கல், மோளப்பாறை, அதை ஒட்டி உள்ள காவிரி கரை பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கால் விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

பூலாம்பட்டியை அடுத்த காவிரிக் கதவணை நீா்த்தேக்கப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் பெருமளவு நீரில் மூழ்கியுள்ளன. கரையோர குடியிருப்புகளை வெள்ள நீா் சூழ்ந்தது. நெடுங்குளம், கூட்டு குடிநீா் நீா் உந்து நிலையத்தில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளதால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com