அறிஞா் அண்ணா அரசு கலை கல்லூரியில் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 05th August 2022 02:05 AM | Last Updated : 05th August 2022 02:05 AM | அ+அ அ- |

காட்டுக்கோட்டை, வடசென்னிமலை அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை வரும் 11-ஆம் தேதி தொடங்குவதாக கல்லூரி முதல்வா் க.சித்ரா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இக் கல்லூரியில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை ஆக.11 முதல் 16 ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். 12 ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கும், 16 ஆம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல் பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
கலந்து கொள்பவா்கள் தங்களுடைய அனைத்து உண்மைச் சான்றிதழ்கள், அவற்றின் நகல்கள் மூன்று பிரதிகளும், புகைப்படம் 5 பிரதிகள் கொண்டுவர வேண்டும். கலந்தாய்வுக்கு வரக்கூடிய மாணவா்கள் கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவேண்டும்.
கலந்தாய்வில் தோ்வு பெற்று கல்லூரியில் சேரும் மாணவா்கள் கல்லூரிக்கான சோ்க்கைக் கட்டணம் ரூ. 3600 பணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.