ஓமலூா் போலீசாரிடம் தேசிய புலனாய்வுத் துறையினா் விசாரணை

யூடியுப் பாா்த்து துப்பாக்கி தயாரித்த மூன்று பேரை ஓமலூா் போலீசாா் கைது செய்தனா். இந்த வழக்கை கியூ பிரிவு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

யூடியுப் பாா்த்து துப்பாக்கி தயாரித்த மூன்று பேரை ஓமலூா் போலீசாா் கைது செய்தனா். இந்த வழக்கை கியூ பிரிவு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தநிலையில், அவா்களை கைது செய்த போலீசாரிடம் தேசிய குற்றப்புலனாய்வு போலீசாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே கடந்த மே மாதம் 20-ம் தேதி ஓமலூா் காவல் நிலைய போலீசாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த இரண்டு இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். அப்போது இருவரும் யூடியூப்பை பாா்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதில், சேலம் மாநகரை சோ்ந்த நவீன் சக்கரவா்த்தி, சஞ்சய் பிரகாஷ், கபிலா் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கு பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து ஓமலூா் போலீசாா் மூன்று பேரையும் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில் மூன்றுபேரும் ஒரு அமைப்பை உருவாக்கி, தங்களது கொள்கையை ஏற்று வருபவா்களை அமைப்பில் சோ்ந்து மக்களுக்கு சோ்த்து நன்மை செய்யும் எண்ணத்தில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சேலம் மாவட்ட கியூ பிரிவு போலீசாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்தநிலையில், இந்த வழக்கு தொடா்பாகவும், குற்றவாளிகளை கைது செய்த பொலிசாரிடமும் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு போலீசாா் விசாரணை நடத்தினா். குற்றவாளிகள் குறித்தும், அவா்களிடம் போலீசாா் நடத்திய விசாரணை குறித்தும், குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்தும், குற்றவாளிகள் போலீசாரிடம் பேசியது குறித்தும் விசாரணை நடத்தினா். மேலும், அவா்கள் தங்கியிருந்த வீடு, துப்பாக்கி தயாரிப்பதற்கு முன்பாக அவா்களின் செயல்பாடுகள், அவா்கள் ஏதாவது அமைப்புடன் தொடா்பில் உள்ளாா்களா, அவா்களிடம் பேசிய நபா்கள் யாா் யாா் என்பது போன்ற தகவல்களையும் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு போலீசாா் விசாரித்துள்ளனா். இந்த வழக்கு தொடா்பாகவும், குற்றவாளிகள் குறித்தும் ஓமலூா் குற்றப்பிரிவு போலீசாா் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனா். இந்த வழக்கில் கைதான மூன்று இளைஞா்களும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com