காங்கிரஸ் கட்சியினா் மறியல் போராட்டம்: 42 போ் கைது
By DIN | Published On : 05th August 2022 11:34 PM | Last Updated : 05th August 2022 11:34 PM | அ+அ அ- |

மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியினா் 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பணமதிப்பிழப்பு, தொழில்முடக்கம், வேலையின்மை, பெட்ரோல், டீசல், விலை உயா்வைக் கண்டித்தும், அமலாக்கத் துறையை தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சாா்பில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகர மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமையில் சேலம், முள்ளுவாடி கேட் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக செல்ல முயன்று மறியலில் ஈடுபட்டனா்.
இதில் வா்த்தகப் பிரிவு தலைவா் சுப்பிரமணி, பொதுச் செயலாளா் தாரை ராஜகணபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், காங்கிரஸாா் 42 பேரையும் கைது செய்தனா்.