ரூ. 5 லட்சம் மதிப்பில் பணிகளுக்கு பூமிபூஜை
By DIN | Published On : 05th August 2022 11:27 PM | Last Updated : 05th August 2022 11:27 PM | அ+அ அ- |

at5bhooja_0508chn_162_8
ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி ஊராட்சியில் 15-ஆவது மாநில நிதிக் குழு மானியத் திட்டம் மூலம் ரூ. 5 லட்சம் செலவில் சாக்கடை மற்றும் குழாய் அமைக்க பூமிபூஜை ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.பத்மினிபிரியதா்ஷினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் கயல்விழி அன்பரசு, ஊராட்சி மன்றத் தலைவா் இசையழகன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.