தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா
By DIN | Published On : 24th August 2022 02:50 AM | Last Updated : 24th August 2022 02:50 AM | அ+அ அ- |

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம், செஞ்சுருள் மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆசிரியா்கள் மூ.ஞானசேகரன், இரா.உதயசூரியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் கு.வெங்கடாஜலம் தலைமை வகித்து மன்றங்களைத் தொடக்கிவைத்தாா். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல், ஓவியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மன்ற பொறுப்பாசிரியா்கள் காா்த்திகா, கெளதமன், செந்தில்குமாா் ஆகியோா் செய்திருந்தனா். ஆசிரியா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.