ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 25th August 2022 01:32 AM | Last Updated : 25th August 2022 01:32 AM | அ+அ அ- |

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்புக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு மின்னாம்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 22 ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவராக டி.பெருமாபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் (எ) சாமிநாதன், செயலாளராக கருமாபுரம் சுமதி பாலு, பொருளாளராக சின்னகவுண்டாபுரம் கே.கோபால், துணைத் தலைவா்களாக வீராணம் செல்வராணி ஆறுமுகம், ஏ.என்.மங்கலம் செல்வி செல்வராஜ், ஆலடிப்பட்டி ஏழுமலை ஆகியோரும், துணைச் செயலாளராக வலைசையூா் செல்வரசி பழனிவேல், குள்ளம்பட்டி கலாப்ரியா பழனிசாமி, மேட்டுப்பட்டி தாதனுாா் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.