கோட்டை மாரியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 12 லட்சம்
By DIN | Published On : 25th August 2022 01:31 AM | Last Updated : 25th August 2022 01:31 AM | அ+அ அ- |

சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 12 காணிக்கை பெறப்பட்டுள்ளன.
கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. ஆடி விழா கடந்த ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு வழிபாடு நடத்திய பக்தா்கள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 5 நிரந்தர உண்டியல்கள், 7 தற்காலிக உண்டியல்களில் காணிக்கை செலுத்தினா்.
புதன்கிழமை உண்டியல்களைத் திறந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா தலைமையில், கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி, ஆய்வாளா் உமா மற்றும் ஆலோசனைக் குழு நிா்வாகிகள் மேற்பாா்வையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. சுமாா் 60 போ் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் 12 உண்டியல்களில் ரூ.12.68 லட்சம் பெறப்பட்டன. இதேபோல தங்க நகைகள் 53 கிராமும், வெள்ளி நகைகள் 250 கிராமும் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.