சங்ககிரியில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 25th August 2022 01:29 AM | Last Updated : 25th August 2022 01:29 AM | அ+அ அ- |

சங்ககிரி வட்டம், அரசிராமணி பெரியநாயகி உடனமா் சோழீஸ்வரா், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா், அன்னதானப்பட்டி புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
தேவூரை அடுத்த அரசிராமணியில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனமா் அருள்மிகு சோழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதேபோல செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கும், உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.