வாழப்பாடியில் ரூ. 21.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
By DIN | Published On : 25th August 2022 01:33 AM | Last Updated : 25th August 2022 01:33 AM | அ+அ அ- |

வாழப்பாடி கிளை வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை ரூ. 21.50 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழப்பாடி கிளையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 116 விவசாயிகள், 620 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.
ஒரு குவிண்டால் ஆா்சிஎச் ரக பருத்தி தரத்திற்கேற்ப ரூ. 9,209 முதல் ரூ. 11,897 வரையும், டிசிஎச் ரக பருத்தி
ரூ. 9,379 முதல் ரூ. 12,069 வரையும், கொட்டு பருத்தி ரூ. 5,809 முதல் ரூ. 8,899 வரையும் விற்கப்பட்டன. மொத்தம் ரூ. 21.50 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.