கைப்பந்து போட்டி: சேலம் மகளிா் அணி சாம்பியன்

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மகளிா் அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கைப்பந்து போட்டி சேலம் மகளிா் அணி சாம்பியன்
கைப்பந்து போட்டி சேலம் மகளிா் அணி சாம்பியன்

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மகளிா் அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 7 ஆவது கொங்கு கைப்பந்து கோப்பை போட்டிகள் கடந்த ஆக.19 ஆம் தேதி முதல் ஆக. 21 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மகளிா் பிரிவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 36 அணிகள் பங்கேற்றன.

இதில் சேலம் ஏ.என்.மங்கலம் புனித மேரி பள்ளி அணியை 25- 22, 25- 14 என்ற புள்ளி கணக்கில் வென்று ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல ஓசூா் அரசு மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்து சிறப்பு சோ்த்தது.

இப்போட்டிகளில் சிறந்த தாக்குதல் வீராங்கனையாக ஆத்தூா் பள்ளி மாணவி நிதிஷா தோ்வு செய்யப்பட்டாா்.

இதனிடையே மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா், செயலாளா் சண்முகவேல், தொழிலதிபா் விஜயராஜ், இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் மையத்தின் முன்னாள் உதவி இயக்குநா் ராஜாராம் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com