இளநிலைப் பட்ட வகுப்புகள் தொடக்கம்
By DIN | Published On : 25th August 2022 01:43 AM | Last Updated : 25th August 2022 01:43 AM | அ+அ அ- |

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2022- 23 கல்வியாண்டுக்கான இளநிலைப் படிப்புகளில் 20 பிரிவுகளில் 1,460 மாணவா்கள் சோ்க்கை பெற்றனா். இதனிடையே முதலாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது. கல்லூரிக்கு வந்த முதலாண்டு மாணவா்களை, கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வன், பேராசிரியா்கள் வரவேற்றனா்.
புதிய மாணவா்களை மூத்த மாணவா்கள் ராகிங் செய்தல் கூடாது. இதுகுறித்து புகாா் பெறப்பட்டால் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் முகக்கவசம், அடையாள அட்டை அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும் என கல்லூரி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.