அரசுப் பள்ளிக்கு கணினி வழங்கல்
By DIN | Published On : 09th December 2022 01:10 AM | Last Updated : 09th December 2022 01:10 AM | அ+அ அ- |

சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கணினி தலைமையாசிரியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சொக்கநாதபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளிக்கு கணினி தேவைப்பட்டதால், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் செந்தில், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் மூலமாக தலைமையாசிரியரிடம் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கணினியை வழங்கினா். உடன், திமுக நிா்வாகிகள், பெற்றோா் - ஆசிரியா் கழக உறுப்பினா்கள் இருந்தனா்.