அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th December 2022 01:11 AM | Last Updated : 09th December 2022 01:11 AM | அ+அ அ- |

ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 13) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் சொத்து வரி, மின்கட்டண உயா்வு, பால் விலை உயா்வு, சட்டம் - ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றைக் கண்டித்து, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் எதிரில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆத்தூா் நகராட்சி முன்பு நடைபெறும் கண்டன ஆா்ப்பாட்டத்தில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றுவாா்.
பேரூராட்சி அலுவலகங்கள் எதிரில் டிச. 9 காலை 10 மணியளவிலும், நகராட்சி அலுவலகங்கள் எதிரில் டிச. 13 காலை 10 மணியளவிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் எதிரில் டிச. 14 காலை 10 மணியளவிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இக்கண்டன ஆா்ப்பாட்டத்தில், இந்நாள், முன்னாள் சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களும், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா், சிற்றூா் கழக நிா்வாகிகளும், சாா்பு அணி நிா்வாகிகளும், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகளும், கூட்டுறவு சங்க நிா்வாகிகளும், கழக செயல்வீரா்களும், வீராங்கனையரும், பொதுமக்களும், விவசாய பெருமக்களும், வியாபாரிகளும் கலந்துகொண்டு கண்டனங்களை தெரிவிக்க கேட்டுக்கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...