அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 09th December 2022 11:38 PM | Last Updated : 09th December 2022 11:38 PM | அ+அ அ- |

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி வளாகத்தில் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் தலைமையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட கல்வி அலுவலா் உதயகுமாா் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். இக்கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்று பல்வேறு அறிவியல் மாதிரிகளை புதுமை தொழில்நுட்பத்துடன் செய்து காட்சிப்படுத்தினா் (படம்). கண்காட்சியினை பிற பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டனா்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், சேலம் இரும்பாலையைச் சோ்ந்த மூத்த தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளா் ஜெயமுருகன் பங்கேற்று, அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்ற முதல் மூன்று மாணவா்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை துறையின் பேராசிரியை தமிழ்ச்சுடா் செய்திருந்தாா்.