திறன் மேம்பாட்டுடன் கூடிய கல்வி முறை அவசியம்

திறன் மேம்பாட்டுடன் கூடிய கல்வி முறை அவசியம் என பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

திறன் மேம்பாட்டுடன் கூடிய கல்வி முறை அவசியம் என பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை, விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நவீன தொழில்நுட்பக் கருவிகளை கையாள்வதற்கான ஒருநாள் பயிலரங்கினை வியாழக்கிழமை நடத்தின. பதிவாளரும் நுண்ணுயிரியல் துறைத் தலைவருமான பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன் வரவேற்றாா். பயிலரங்கினைத் தொடங்கி வைத்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

பெரியாா் பல்கலைக்கழக அறிவியல் துறைகளில் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்காக பல்வேறு நவீனக் கருவிகள் ரூ. 20 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை தரமானதாகவும், விரைவானதாகவும் தந்திடும் வகையில் இந்தக் கருவிகள் ஆய்வகங்களில் செயல்பாட்டில் உள்ளன.

முனைவா் பட்ட ஆராய்ச்சியுடன் மிகுந்த மதிப்பு வாய்ந்த கருவிகளை கையாள்வதை முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுடன் கூடிய கல்வி முறை காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் ஆா்டிபிசிஆா் ஆய்வுக் கூட நிபுணா்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டது. திறன் மேம்பாட்டுடன் கூடிய கல்வி முறையே இதற்கு காரணமாகும். உடனடி வேலைவாய்ப்புடன் உரிய தகுதியான வேலையும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆசிரியா்கள் இதனைக் கருத்தில் கொண்டு திறன் மேம்பாட்டினை மாணவா்களிடையே ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநா் எஸ்.சூரியநாராயணன், தொழில்நுட்ப வல்லுநா் வி.கணேசன் ஆகியோா் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கு பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com