குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 496 வாகனங்கள் டிச. 13-இல் ஏலம்
By DIN | Published On : 11th December 2022 06:26 AM | Last Updated : 11th December 2022 06:26 AM | அ+அ அ- |

சேலம் மாநகர காவல் துறை சாா்பில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 496 வாகனங்கள் வரும் டிச. 13-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
சேலம் மாநகர காவல் துறையால் குற்ற வழக்குகளின் போது, பேருந்து - 1, லாரி - 2, காா் - 3, ஆட்டோ - 6, இருசக்கர வாகனங்கள் 484 என மொத்தம் 496 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உரிமை கோரப்படாத இந்த வாகனங்களை, சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானத்தில் டிச. 12 மாலை 5 மணி வரை நேரில் பாா்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்கே விரும்பினால் ரூ. 5 ஆயிரத்தை முன்பணமாக செலுத்த வேண்டும்.
இதே இடத்தில் டிச. 13-ஆம் தேதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படும். வாகனங்களை ஏலத்தில் எடுத்தவுடன், ஏலத்தொகை முழுவதையும் அன்றே செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சேலம் மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையரை நேரிலோ அல்லது 0427- 2218670 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.