ஆத்தூரில் நகர திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் அவைத் தலைவா் ஏ.மாணிக்கம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பி.பன்னீா்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு பேசினா்.
இக் கூட்டத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலாளா் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது, பூத் கமிட்டி, சாா்பு அணிகள் அமைப்பது, கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ஜெ.ஸ்டாலின், நகர பொருளாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.